Saturday, September 30, 2023

வினாயகர் வணக்கம்

வினாயகர் வணக்கம் 


தேவாரம்
 

பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடி கணபதி வர அருளினன் மிகுகொடை
விடிவினர் பயில் வலிவல உறை இறையே.

- திருஞானசம்பந்தர்.

விளக்கம் 

மிகுதியான வள்ளல் தன்மை பொருந்திய மக்கள் வாழ்கின்ற வலிவலத்தில் இருக்கின்ற இறைவன், இறைவி பெண் யானையின் உருவம் கொள்ளவும் தான் ஆண் யானையின் வடிவு கொண்டு,தமது அடியில் பக்தி கொண்டு வணங்கும் அடியவர்களின் இடர்களைக் விரைவாக,வெருட்டியும் களையும் இயல்பு படைத்த கணபதியைத் தோற்றுவித்து அருளினான்.

---***---

அபிராமி அந்தாதி

தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை
ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே.-உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே-
கார் அமர் மேனிக் கணபதியே.-நிற்கக் கட்டுரையே...

- அபிராமி பட்டர்.

விளக்கம்

மாலையாகப் பொருந்திய கொன்றையையும் சண்பகமலர் மாலையையும் முறையே அணிந்தருளுகின்ற தில்லையெம்பெருமானுக்கும், அப்பெருமான் வாமபாகத்தில் உறைகின்ற உமாதேவியாருக்கும் திருக்குமரனே, கரிய நிறம் பொருந்திய திருமேனியையுடைய கணபதியே, ஏழு உலகங்களையும் பெற்ற சிறப்புடைய அபிராமியம்மையைப் பற்றிய அந்தாதியென்னும் இப்பிரபந்தமானது எப்போதும் என் உள்ளத்துக்குள்ளே நிலைபெறும்படி திருவாய்மொழிங் தருளுவாயாக.

--- *** ---

கந்தபுராணம் 

திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மனி யாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவோம்....

-கட்சியப்பர்.

விளக்கம்

திகழ்கின்ற பத்து கரங்களையும் ஐந்து செம்முகங்களையும் உடையவன், சக்ராயுதத்தை உடையவன், தாமரைமேல் வீற்றிருப்பவன், எங்கும் நிறைந்திருப்பவன், விகட சக்கரனாகிய அந்த விநாயகனின் பாதங்களை வணங்குவோம்.

---***---

திருத்தொண்டத்தொகை

திருத்தொண்டத்தொகை சுந்தர மூர்த்தி நாயனார்  -  தில்லையில் அருளியது  1. தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்; திரு நீல கண...